குடி பழக்கத்தால் சுழன்ற குடும்பம்
குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தம் கொண்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்;
குடிபோதையில் தந்தையின் துன்புறுத்தல் – 25 வயது ஆசிரியர் வாழ்க்கையை முடித்தார்
காங்கேயம் அருகே மறவபாளையத்தைச் சேர்ந்த ஜீவா (25), படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அமைதியாக இருந்த ஜீவா, குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக மனச்சோர்வில் இருந்ததாக கூறப்படுகிறது. தந்தை மூர்த்தி அடிக்கடி குடிபோதையில் குடும்பத்தை துன்புறுத்துவதாக, அருகிலுள்ளோர் தெரிவித்தனர்.
தொற்றிக் கொண்ட மன அழுத்தம், அடிக்கடி ஏற்பட்ட குடும்ப மோதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஜீவா, விபரீத முடிவெடுத்தார். இச்சம்பவம் அந்த பகுதியை கலங்கவைத்துள்ளது. குடிபோதையில் தந்தையால் குடும்பம் பாதிக்கப்படுவதால், பல இளைய உயிர்கள் சிக்கிக்கொண்டு வருவதை இந்த நிகழ்வு மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.