காஷ்மீர் தீவிராவாத தாக்குதலைக் கண்டித்து திருச்செங்கோட்டில் பாஜக ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து, மேற்கு மாவட்ட பாஜக சார்பில், திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-05 10:30 GMT

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து, மேற்குமாவட்ட பாஜக சார்பில் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து, மேற்கு மாவட்ட பாஜக சார்பில், திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற தீவீரவாதிகளைக் கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டு, போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் பாஜகவின் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யும் தமிழக அரசைக் கண்டித்தும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். திரளான மாநில, மாவட்ட, மண்டல, கிளை பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


Similar News