நாமக்கல்லில் நாளை துவங்கி 3 நாட்கள் ஸ்ரீ ராமநவமி உற்சவம்
நாமக்கல் நகரில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நாளை துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.;
பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் நகரில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நாளை துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
நாமக்கல் ஸ்ரீ ராமகிஷ்ண மாருத்யாதி பஜன கான சபா சார்பில் 111வது ஆண்டு, ஸ்ரீ ராம நவமி உற்சவம், நாளை 6ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை, நாமக்கல் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள முல்லை மஹாலில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தினசரி காலை, மாலை வேளைகளில் அர்ச்சனை, தீபாராதணை மற்றும் திவ்யநாம பஜனை சங்கீர்த்தனம் நடைபெறும். வரும் 7ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், சீதாராம கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். தொடர்ந்து தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 6 மணிக்கு திவ்யநாமம், வசந்த கேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடைபெறும். சிறப்பு பூஜைகளை மோகனூர் பத்மநாபராவ் பாகவதர் மற்றும் மகாதானபுரம் மோகன் பாகவதர் குழுவினர் நடத்தி வைக்கின்றனர். விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு ஆசி பெறலாம் என ஸ்ரீ ராமகிஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.