தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு- நாமக்கல்லில் சசிகலா பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சரி என்ற, சென்னை உரிமையியல் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்வோம் என்று நாமக்கல்லில் சசிகலா தெரிவித்தார்.

Update: 2022-04-11 08:45 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த சசிகலாவுக்கு, கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

சென்னை உரிமையியல் கோர்ட்டில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று கோரி சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியானது.

தீர்ப்பில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இன்று நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த சசிகலாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த தீர்ப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என்று கூறினார்.

முன்னதாக நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் சார்பில், அர்ச்சனை, தீபராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயில் உட்பிரகாரம் வலம் வந்த அவர் கோயிலை விட்டு புறப்பட்டுச் சென்றார். திரளான ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 

Tags:    

Similar News