நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 380 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 முனிசிபாலிட்டிகளில் போட்டியிட்ட 380 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு.

Update: 2022-02-24 02:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில், 5 முனிசிபாலிட்டிகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 380 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 5 முனிசிபாலிட்டிகள், 19 டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள, 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கடந்த 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 22ம் தேதி 3 மையங்களில் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் நகராட்சியில், மொத்தம் உள்ள 39 வார்டு கவுன்சிலர் பதவிக்கு, 168 பேர் போட்டியிட்டனர். அதில் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 37 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 166 பேர் போட்டியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிவில் திமுக 36 இடங்களையும், அ.தி.மு.க ஒரு இடத்தையும் கைப்பற்றியது. தேர்தலில்போட்டியிட்ட 90 பேர் டெபாசிட் இழந்தனர்.

இராசிபுரம் நகராட்சியில், 78 பேர், திருச்செங்கோட்டில், 59 பேர், பள்ளிபாளையத்தில், 44 பேர், குமாரபாளையத்தில், 109 பேர் என, 5 நகராட்சிகளில் மொத்தம் 380 பேர் டெபாசிட் இழந்தனர். அவர்களில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ, நாம் தமிழர், ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.

Tags:    

Similar News