மதுரை, அலங்காநல்லூர் அருகே யாரும் தேவை இல்லை குடுபத்தை கதற விட்ட லெஸ்பியன் ஜோடி

மதுரை, அலங்காநல்லூர் அருகே யாரும் தேவை இல்லை குடுபத்தை கதற விட்ட லெஸ்பியன் ஜோடி

Update: 2021-09-30 04:25 GMT

மதுரை, அலங்காநல்லூர் அருகே யாரும் தேவை இல்லை: குடும்பத்தை கதற விட்ட லெஸ்பியன் ஜோடி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு கணவனிடமிருந்து பிரிந்து மாயமான பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தனது தோழியுடன் திருநம்பி ஆகி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருநம்பியாக மாறிய அவரால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனக் கூறி அந்தப் பெண் சென்றதால் கணவர் குடும்பத்தினர் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேல பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அந்தப் பெண் மாயமானார். அவரை அனைத்துப் பகுதியிலும் தேடியும் கிடைக்காததால் அலங்காநல்லூர் போலீசில் மாயமான தனது மனைவி குறித்து சரவணன் புகாரளித்திருந்தார். மேலும் இது தொடர்பாக காணாமல் போன ஜெயஸ்ரீயின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அலங்காநல்லூர் போலீசார் மாயமான ஜெயஸ்ரீயை சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் வைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கணவனை விட்டு பிறிந்த ஜெயஸ்ரீ திருநம்பியாக மாறி தனது பள்ளித் தோழி ஜெயதுர்கா என்பவருடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் இருவரையும் மதுரை அழைத்து வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஜெயஸ்ரீ தான் திருநம்பி ஆகிவிட்டதாகவும் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லாததால் தனது தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது சுய விருப்பத்தின் பேரில் நடந்து கொள்ள அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ தனது தோழியுடன் செல்வதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கிடைத்தாலும் திருநம்பி ஆனதால் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர்.

Similar News