மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-02 06:51 GMT

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

மதுரையில் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

நடிகர் அஜித்குமார் 53 வது பிறந்த நாள் விழாவை நேற்று அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள். தல ரசிகர்களின் இந்த விழாக்கள் தமிழகம் களை கட்டியது. மேலும் அவரது பிறந்த நாளில் நேற்று வெளியான ௩ படங்களையும்  ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

அந்த வகையில் மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள சுதந்திர நகர் 3 வது தெருவில், மே உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்விஎம் மெட்டல் ஏ.கே. நண்பர்கள் சார்பில் 3 ம் ஆண்டு அன்னதானம் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். மேலும், மே.1 ம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆர்.வி.எம். மெட்டல் ஏ.கே. நண்பர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News