மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.;
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் பண்டபத்தில், கோடை வெயிலில் அவதிக்கு உள்ளாகும் பொது மக்களுக்கு நீர், மோர், தண்ணீர் பழம், பழரசம் ஜூஸ், சர்பத் இளநீர், கொடுத்தனர் திமுக இளைஞரணியினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கோடை வெயில் 104 டிகிரி வரை உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கி வருகின்றது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்தால் வாடி வதங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்கவும், பொதுமக்கள் கோடை வெயில் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள திமுக இளைஞரணி சார்பாக நீர் மோர், தண்ணீர் பழம், வெள்ளரிப்பிஞ்சு போன்றவைகளை பொது மக்களுக்கு கொடுத்தனர்.
விழாவிற்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் விமல் தலைமை தாங்கினார். மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, ஆறுமுகம், டிப்போ ரவி கவுன்சிலர் சக்தி ரமேஷ், ரவிசந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
16 கால் மண்டபத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர், தண்ணீர் பழம், பழரச சூஸ், சர்பத், ரோஸ் மில்க் போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கினர்.
பொதுமக்கள் நீர்மோர் தண்ணீர் பழம் சர்பத் பழரசம் ஆகியவற்றை விரும்பி ஆவலுடன் வாங்கி சாப்பிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை தீர்த்துக் கொண்டனர்.