மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசினார்.
மதுரை வளையங்குளத்தில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பு விடுதலை முழக்க மாநாட்டில் கவி பேரரசு வைரமுத்து கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஐந்தாம் தேதியை வணிகர் தினமாக வணிகர் சங்கங்கள் கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் மதுரை அருகே வளையங்குளத்தில் இந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கவிஞர் வைரமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லிவிட்டேன். எம்.எஸ்.வி .யா, கண்ணதாசனா என்ற கேள்விக்கு:உடலா ,உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் ப எம்.எஸ்.வி.யா, கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில் வரும். எம் .எஸ். வி. உயிராக இருந்தி ருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் ,உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது.
இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் பரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன்.
வணிகர்கள் தான் ஒரு சமூகத்தின் இரத்த ஓட்டம். வணிகர்கள் தான் பல்வேறு இடங்களில் விளையும் பொருட்களை நமது வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.வணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்வதற்கான வசதிகளை மத்திய மாநில அரசுகள் செய்து கொக்கவேண்டும்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார்.