மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.;
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மே 1 ம்தேதி உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு தொழிலாளி எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இனம், மொழி, நாடு இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு தினம் உண்டென்றால் அது மே 1 தொழிலாளர் தினம் தான். அத்தகைய சிறப்புக்குரிய மே தின விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார், செயலாளர் சேகர், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர் .
முன்னாள் துணைத்தலைவர் அசோக் வரவேற்றார்.திமுக மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார் . நிகழ்ச்சியில் , தொழிற் சங்க நிர்வாகிகள் மோட்ச ராசா, நடத்துனர் செல்வம் முன்னாள் தலைவர் குணா, துணைத்தலைவர் பூபதி மற்றும் ஆட்டோ ஒட்டுநர்களும் உரிமையாளர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.