மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ முகாம்

மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2024-05-03 10:07 GMT

மதுரை அருகே சுபிட்சம் மருத்துவமனையில், மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில், உள்ள தேவர் மஹாலில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமினை, ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில், ஆட்டோ ஓட்டுனர்களின் உடல் வெப்ப சமநிலையின்மை நிர்வகித்தலுக்கான (Body Heat Imbalance Management - BHIM) விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை உடல்நல அலகுகள், முழு உடல் பரிசோதனைகள், ஆலோசனைகள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், தலை முதல் கால் வரை நுணுக்கமாக பரிசோதனைகளை மருத்துவர் பாலமுருகன் வழங்கினார்.

மேலும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், பெண் செவிலியர்கள் பிரத்யேகமாக முகாமில் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர். கலந்துகொண்ட அனைவருக்கும் இரத்த அழுத்தம் பரி சோதிக்கப்பட்டது. தேவைப்படும் நபர்களுக்கு தகுந்த மேல் சிகிச்சை மருத்துவ ஆலோசனையும் உரியமுறையில் வழங்கப்பட்டது.

காலை 7மணிக்கு துவங்கி மதியம் 1 மணிவரை மருத்துவ முகாம் சிறப்புற நிகழ்ந்தது. முகாமில், ஏபிஆர் ஆட்டோ சங்கம், சக்கர ஆழ்வார், தொல்காப்பியர் ஆட்டோ சங்கம், ஏஐடியுசி, சிஐடியு மற்றும் எஸ்.பி சரவணன் ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தினர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டு பயனடந்தனர்.

Tags:    

Similar News