சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சமயநல்லூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்கும் விழாவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.;
சமய நல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர்
மதுரை மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சமயநல்லூர் ஊராட்சியில் நீர்மோர் வழங்கும் விழா - எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அலங்காநல்லூர், மே.5:
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி சமயநல்லூர் ஊராட்சியில், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பட்டில், நடைபெற்ற கோடைகால நீர்மோர் பந்தல் வழங்கும் விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ கருப்பையா, மாணிக்கம், சமயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மலையாளம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பஞ்சவர்ணம், அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், ராஜேஷ் கண்ணா, கிளை செயலாளர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்
அம்மு லோகேஸ்வரன், கூட்டுறவு வங்கித்துணைத் தலைவர் ராகுல், நிர்வாகிகள் உலகநாதன், தங்கமுருகன், சரிதாபானு, உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.