கரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்பாட்டம்

கரூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-10 09:09 GMT

கரூரில்   12   அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர். 

      கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு சிஐடியுசி மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற ற ஆர்பபாட்டத்தில் கட்டாய லைசன்ஸ் சட்டத்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக விரைந்து தடுப்பூசி அளிக்க வேண்டும்.

      நாடு முழுவதும் தேவைப்படும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே பொறுப்பேற்று கொள்முதல் செய்து வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொழிலாளர் விரோத, மக்கள் விரோத விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தனியார் மயமாக்குதலையும், பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

      வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்துக்குக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News