ஆரோக்கிய இந்தியா ஓட்டம்: ஆட்சியரும் ஓடி அசத்தல்

கரூரில் இன்று நடைபெற்ற ஆரோக்கிய இந்தியா ஓட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி அசத்தினார்.

Update: 2021-09-04 10:00 GMT

கரூரில் ஆரோக்கிய இந்தியாவை வலியுறுத்தி நடைபெற்ற ஓட்டத்தில்  பொதுமக்களுடன் சேர்ந்து ஓடுகிறார் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் ஆரோக்கியமான இந்தியா தொடர் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம் தாந்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை எல்லையாக நிர்ணையக்கப்பட்டு இருந்தது. சுமார் 200 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினர்.

போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் மிதவேக ஓட்டம் ஓடினார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய மாவட்ட ஆட்சியரை கண்டு விளையாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் உற்சாகம் அடைந்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் மாவட்ட ஆட்சியர்கள், இதுபோன்ற தொடர் ஓட்டங்களை துவக்கி வைப்பதோடு சென்று விடுவது வழக்கம். ஆனால், கருர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வீரர்களோடு சேர்ந்து ஓடியது வரவேற்பை ஏற்படுத்தியது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றதும் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags:    

Similar News