கரூரில் பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்: தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கரூரில் ராட்சத பலூன்: பறக்க விடப்பட்டது.

Update: 2024-04-05 16:06 GMT

கரூரில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்.

நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் நூறு சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான தங்கவேல் ராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேர்தல் நாள் ஏப்ரல் 19, 2024 அனைவரும் வாக்களிப்போம். 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த 10 அடி சுற்றளவு மற்றும் 10 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயுநிரப்பப்பட்ட இராட்சத பலூனை வானில் 150 அடி உயரத்தில் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு அஞ்சல் அட்டையை வெளியீட்டு வாக்களர்களின் வீடுகளுக்கு அனுப்பும் பணியையும் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், தேர்தல் அலுவலர் சையது காதர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.

நூறு சதவீத வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News