கரூர் நகராட்சியில் சிறப்பு தூய்மை பணி துவக்கம்

கரூர் நகராட்சி பகுதியில் 48 வார்டுகளிலும் 800 பணியாளர்களை கொண்டு சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது

Update: 2021-10-08 05:45 GMT

கரூர் நகாராட்சி பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். 150 ஆண்டுகால கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அண்மையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டு பகுதியையும்  தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையிலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள், தினசரி குப்பைகளை அகற்றிட சிறப்பு கவனம் எடுத்து இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி, நகராட்சி பகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் சிறப்பு தூய்மை பணியினை தொடங்கி வைத்தனர்.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் 800க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களைக் கொண்டு சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து நகராட்சி முழுவதும் இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News