கரூர் எம்பி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் தங்கவேலு ஆய்வு

கரூர் எம்பி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் தங்கவேலு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-09 17:17 GMT

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு ஆய்வு செய்தார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளும், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்படும்.

மக்களவைத்பொதுத்தேர்தலில் கரூர் மக்களவைத்தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட கரூர். அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டமன்றத்தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களில் வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் அறைகள் குறித்தும், வாக்குப்பதிவு முடித்தபிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக அறைகளில் (STRONG ROOM) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவு முடிந்து கொண்டுவரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான இடம் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களில் கொண்டுவரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்கள் எந்த வழியே வந்து எந்த வழியே செல்ல வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக ஆய்வு நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். விமல்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News