நாங்களும் சளைத்தவர்கள் அல்ல: கரூரில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கரூர் மாநகராட்சியில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டது.

Update: 2022-02-01 17:15 GMT

பைல் படம்.

தமிழக அளவில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் என்று வெறும் வார்த்தைகள் அல்ல, வெற்றி, தோல்வி தான் நிர்ணயம் செய்யும் பொருட்டு கட்சியின் பெரும்பான்மையை காண்பிக்கும் வார்த்தைகளாக இந்த நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் பாஜக கட்சியும் தனித்தே களமிறங்கியுள்ளது. காரணம், தற்போதைய தமிழக பாஜக கட்சி தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலையின் செயல்களும் அவரது செயல்பாடுகளும் தான். அந்த அளவில் ஏராளமான பிரபலங்கள் தற்போது பாஜக கட்சிகளுக்கு மாறி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் இருந்தே பல்வேறு பிரமுகர்கள் பாஜக கட்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், கரூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை முதற்கட்டமாக 37 நபர்களை பாஜக கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவித்து, மாநிலத்தலைவர் கையப்பமிட்டு பட்டியலை முதற்கட்டமாக கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ளார். 48 வார்டுகளில் 11 நபர்கள் மட்டும் தான் மீதம் வெளியிட வேண்டும். இதுமட்டுமில்லாமல், புதியதாக கரூர் புறநகர் பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் தேர்தல் குறித்த ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News