நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை எப்படி ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவது பற்றி அனைவருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-21 14:30 GMT

வாக்கு எண்ணிக்கை மையத்தினை பார்வையிடும் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர்,  வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளுக்கு காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியும்,  குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளுக்கு  மாதா பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலில்  பதிவான வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிது என விளக்கமளிக்கபட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி - 14 டேபிள், 14ரவுண்டு

மாங்காடு நகராட்சி - 6 டேபிள் , 9 ரவுண்டு 

குன்றத்தூர்  நகராட்சி -  6 டேபிள், 9 ரவுண்டு

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி - 3டேபிள், 9 ரவுண்டு 

உத்திரமேரூர் பேரூராட்சி - 3டேபிள், 9 ரவுண்டு

வாலாஜாபாத் பேரூராட்சி _ 3 டேபிள், 6ரவுண்டு 

வாக்கு எண்ணிக்கை அலுவலர் - 70அலுவலர்கள்


Tags:    

Similar News