மக்கள் வளர்ச்சி நல திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில் செயல்பட்டுவரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-13 12:45 GMT

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் அமரம்பேடு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாடல் வீடு கட்டப்பட்டு வருவதை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்ட போது

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில் செயல்பட்டுவரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில், அமரம்பேடு காலனி பகுதியில் கலையரசி க/பெ வெங்கடேசன் என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 360 சதுர அடி பரப்பளவில் 300 சதுர அடி பரப்பளவில் ஆர்.சி.சி கான்கிரீட் கூரை கொண்ட “கலைஞரின் கனவு இல்லம்” திட்ட மாதிரி வீடு (Model House) ஊரக வளர்ச்சி துறையால் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சியில் ஊரக குடியிருப்புப் பழுதுப் பார்ப்பு திட்டக் கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட சிறு பழுது மற்றும் பெரும் பழுது செய்யப்பட வேண்டிய பயனாளிகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்படுள்ள பயனாளிகளின் வீடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான பயனாளிகள் எவரும் விடுப்படாதவண்ணம் பட்டியலில் சேர்த்திட அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அமரம்பேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10.00 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும், புதிய குளம் பணியினையும் பார்வையிட்டு, ஊராட்சியில் இணையவழி வரி வசூலித்தல், கட்டிட அனுமதி போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கான சேவைகளை காலதாமதமின்றி வழங்க ஊராட்சி மன்றத் தலைவருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் குன்றத்தூர் நகராட்சி குப்பை கிடங்கினையும்  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இவ்ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News