காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது

காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-14 15:26 GMT

கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து நாட்களில் நான்கு கொலைகள் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை , விரைந்து நடவடிக்கை எடுத்து 16 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.

கோயில் நகரம்,  பட்டு நகரம் மற்றும் தொழிற்சாலை நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே மெல்ல மெல்ல காஞ்சிபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடி பெயர்ந்து அதிகளவில் பணிக்கு சென்று வருகின்றனர்.

மேலும் பல்வேறு தொழிற்சாலை மற்றும் கட்டிடப் பணிகளுக்காக வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகவே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு இருந்து வருகிறது. குறிப்பாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் போன்ற பகுதியில் செயல்படும் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் குற்ற சம்பவங்களை தடுக்க தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற நிலையில் கடந்த 10 நாட்களில் வாலாஜாபாத் காவல் நிலையம் பகுதியில் கட்டவாக்கம் கிராமத்தில் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டி கொலை , வாலாஜாபாத் பகுதியில் வழிப்பறிக்காக தொழிற்சாலை ஊழியர் கொலை, டாஸ்மார்க் அருகே ஏற்பட்ட மோதலில் பிஎஸ்எப் வீரர் கொலையாக மாறியது , பாலு செட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து அதிகாலை வெட்டி கொலை என வெவ்வேறு சம்பவங்களில் 4 கொலை சம்பவம் நடைபெற்றது.


அதிர்ச்சி அடைந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை உடனடியாக தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளின் ஓரிரு நாட்களில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மூதாட்டி கொலை வழக்கில் அதே வீட்டில் தங்கி இருந்த இரண்டு நபர்கள் , தொழிற்சாலை ஊழியரிடமிருந்து வழிப்பறி செய்து அவரை கொலை செய்த வழக்கில் நான்கு பேர் , டாஸ்மாக் சம்பவ கொலை வழக்கில் 4 பேர் , மூதாட்டி கொலை வழக்கில் இருவர் , கோவிந்தவாடி அகரத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆறு நபர்கள் என மொத்தம் 16 நபர்கள் நான்கு கொலை வழக்கு சம்பந்தமாக அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News