கந்து வட்டி கொடுமையால் பெண் கண்ணீர் மல்க எஸ்பி அலுவலகத்தில் புகார்

காஞ்சிபுரம் சதாவரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சல்மா என்ற பின் அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவரின் மனைவியிடம் ரூபாய் 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

Update: 2024-06-13 12:15 GMT

கடன் வாங்கியதற்கு மேல் இரு பங்கு பணம் செலுத்தியும் தன்னை பணம் செலுத்த துன்புறுத்துவதாக கூறி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்ய வந்த பெண் சல்சா.

காஞ்சிபுரத்தில் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி, அசல் செலுத்தியும் தன்னையும், தன் பெண் குழந்தைகளையும் கடத்தி விடுவதாக பணம் கொடுத்த நபர் மிரட்டுவதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி இடம் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் சதாவரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பெண் சல்சா, இவர் தனது கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 2020-ஆம் வருடம் காஞ்சிபுரம் சதாவரத்தில் வசிக்கும் அருள் என்பவரிடம் எனது வீடு கட்டுவதற்காக கடனாக ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம்) 10 நாட்களுக்கு ரூ.10000- வட்டி வீதம் வாங்கியுள்ளார்.

அதன்பிறகு மாதத்திற்கு மூன்று தவணையாக ரூ.30000/- வட்டி கட்டி வந்துள்ளார். இந்நாள் வரை அசலுக்கும் அதிகமாக ரூ.4,50,000/- வட்டி மட்டும் கட்டி உள்ளேன்.

கடந்த ஏப்ரல் மாதம் 2024 அன்று ரூ.50,000/- பணம் அருளிடம் தந்தும்,மேற்படி நபர் தன்னை தகாத முறையில் திட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு, பின்னர் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார்.

அதன்பிறகு சரியாக வட்டி பணம் கட்ட முடியவில்லை. கடந்த 11.06.2024 அன்று இரவு 8 மணிக்கு அருள் எனது வீட்டிற்கு வந்து தனக்கு இப்போதே ரூ.2,00,000- பணம் கொடுத்து ஆகணும், இல்லைனா உன்னை வீட்டோட கொளுத்தி விடுவேன், நீ எப்படி வீட்டை விட்டு வெளிய போறன்னு நான் பாக்குறேன் என்று எனது வீட்டு கதவை வெளியே பூட்டி விட்டு போய் விட்டார்.

மேலும் , இன்னும் இரண்டு நாட்களில் பணம் வரலைனா உன்னை கடத்திக் கொண்டு போய் விடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றார்.

அதன்பிறகு வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் வீட்டு கதவை உடைத்து கதவை திறந்து விட்டனர். அதன்பிறகு நேற்று மன உளைச்சலில் எனது வீட்டில் சாவதற்கு தூக்கு மாட்டிக் கொண்டேன். எனது கணவரும், என் அம்மாவும் என்னை காப்பாற்றினார்கள்.

எனவே அவர்கள் என்னிடம் ரூ.2,00,000/- பணத்திற்கு மாதம் ரூ.30000- வீதம் அசலை விட அதிகமாக வட்டியாகவே கந்து வட்டி வசூல் செய்து என்னையும், எனது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய சதாவரத்தை சேர்ந்த அருள் என்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News