விவசாய நலன் காக்கும் கூட்டம் ஜூன் 28ஆம் தேதிக்கு மாற்றம்

மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

Update: 2024-06-13 12:00 GMT

கோப்பு படம்.

ஜூன் 2024 மாதம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.06.2024 அன்று நடத்திட மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.06.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற இருந்தது.

நிர்வாக காரணங்களால் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 28.06.2024 அன்று காலை 10.30 மணிக்கு நடத்திட மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க

பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை 28.06.2024 அன்றைய தினம் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் இந்தக் கூட்டம் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று ஏழு நாட்கள் முன்னதாக நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு அதன் பேரிலேயே கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இல் இருந்து இந்த நடவடிக்கை இருந்தது. 

தற்போது மாவட்ட ஆட்சியர் தொடர் ஆய்வு பணிகள் மற்றும் நிகழ்வுகளில் இருப்பதால் இந்த வாரம் கூட்டம் நடத்த இயலாது எனவும், இதனை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News