ஸ்ரீபெரும்புதூரில் கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி, கள்ளக்காதலனை, 18 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்

கவணனை கொலை செய்த வழக்கில், நீதி மன்றத்தில் ஆஜராகாமல் 18 மாதங்களாக தலைமறைவாக இருந்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-12 12:15 GMT

கைது (பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டம் ,  ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2013 ஆம் ஆண்டு கள்ளத்தொடர்பு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்த அம்சா என்பவர்  கள்ளக்காதலன் கோபி உடன் இணைந்து அம்சா கணவண் மோகன் என்பவரை கொலை செய்தனர்.

இது சம்பந்தமாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான  இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில் இவ்வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது

இந்நிலையில் எதிரிகள் அம்சா மற்றும் கோபி ஆகிய இருவரும் கடந்த 18 மாதங்களாக வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதை தொடர்ந்து இருவருக்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது .

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவின்பரில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இன்று இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News