ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி இயந்திரங்கள்..!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் நேற்று இரவு 2 ஜேசிபிகள் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2024-05-09 09:15 GMT

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் மர்மமான முறையில் தீயில் எரியும்  ஜேசிபி இயந்திரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மர்மமான முறையில் தீ வைக்கப்பட்டு முற்றிலும் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி,  தீ வைத்ததாக பரவும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உரிய விளக்கம் அளிக்குமா காவல்துறை ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப் படுகை மற்றும் ஏரிகளின் மணல் எடுப்பதற்கு  கடந்த எட்டு வருட காலமாகவே தடை விதிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தொடர் குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு  வருகிறது.

மேலும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அவ்வப்போது காவல்துறைக்கு ரகசிய தகவல் வருவதின் பேரில் அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் கடுவஞ்சேரி பகுதியில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள்  மர்மமான முறையில் தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் உடனடியாக சென்று பார்த்தனர். ஆனால்   தீ கொழுந்து விட்டு எரிந்ததில் இரண்டு இயந்திரங்களும்  முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்து இருந்தது.

இச்சம்பவம் பெரும் பபரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த வாகனம் மணல் கடத்தலில் ஈடுபட்டதா என்பதும், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை இல்லை என்பதால், அப்பகுதி பொதுமக்கள் உயர் காவல் அதிகாரிக்கு ( ASP ) தெரிவித்தனரா ? அவர் அங்கு வந்து  அவ்வாகனத்தை தீ இட்டு கொளுத்தியதாக தகவல் வேகமாக அப்பகுதியில்  பரவி வருகிறது. தீப்பற்றி எரிந்த வாகனம் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து உண்மை நிலையை காவல்துறை விளக்குமா ? அல்லது அப்பகுதியில் மணல் கடத்தல் நடந்ததா என தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Tags:    

Similar News