சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.

உத்திரமேரூர் வட்டம், செய்யாற்றின் குறுக்கே சிலாம்பாக்கம் ஊராட்சி அருகே ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

Update: 2024-05-18 07:45 GMT

சிலாம்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் விரைவாக நடைபெறும் காட்சி

உத்திரமேரூர் அருகே  ரூ. 35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிலாம்பாக்கம் அணைக்கட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - பருவ மழை காலத்திற்க்குள் முன்பே பணிகள் முழமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய பணிகளுக்கு பெரிதும் உதவும் என விவசாய சங்கங்கள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு நபர்கள் கோரிக்கை வைத்தபடி இருந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த பாலாற்றின் குறுக்கே ஏழு தடுப்பணைகள் அமைக்கப்படும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலாற்றில் பழையசீவரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.


ஏற்கனவே தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் பகுதியிலும், ஈசூர் வள்ளிபுரம் பகுதியிலும் என இரண்டு கட்டப்பட்டதுஇந்நிலையில் மாகரல் கிராமப் பகுதியிலும் செல்லும் செய்யாற்றில் சிறிய தடுப்பணை ரூபாய் எட்டு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இந்த தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில் நீர் தேங்கி குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாய பெருமக்களுக்கும் பெரிதும் உதவியது.

தற்போது அதே செய்யாற்றில் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட சிலாம்பாக்கம் - புதுப்பாளையம் கிராமத்தின் இடையே புதிய அணைக்கட்டு நபார்டு திட்டத்தின் கீழ் அமைக்க ரூ. 35 கோடியே 21 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். ஆற்றின் குறுக்கே 480மீட்டர் நீளமும்,1.8மீட்டர் உயரமும் கொண்டதாக புதிய அணைக்கட்டு கட்டப்படுகிறது.

இந்த சிலாம்பாக்கம் அணைக்கட்டு கட்டுவதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடது மற்றும் வலது பக்கத்தில் உள்ள சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை மாகரல் ஆகிய கிராமங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம் அரசாணைபாளையம் , வயலாத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களை சார்ந்த 1516 ஏக்கர் விலை நிலங்களும் , வயலாத்தூர் வாய்க்காலின் மூலம் 106 ஏக்கரும் என மொத்தம் 1623 ஏக்கர் விவசாய நிலங்கள் கூடுதல் நீர் பாசனம் பெறும் .

இது மட்டும் இல்லாமல் இந்த புதிய அணைக்கட்டால் 132 விவசாய கிணறுகளும் நீர் ஆதாரம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாவட்ட விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இந்த அணைக்கட்டு அமைவதால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது வரை சுமார் 60சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் முழுவதுமான பணிகள் 4மாத காலங்களில் மழைக்காலம் முன்பு பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News