காஞ்சிபுரம்: வரிசையில் காத்திருந்து அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் இறுதிநாளின் வரிசையில் நின்று அதிமுக வேட்பாளர்கள் 15பேர் மனு தாக்கல்.

Update: 2022-02-04 08:00 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் இறுதிநாளின் வரிசையில் நின்று அதிமுக வேட்பாளர்கள் 15பேர் மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.

நேற்று வரை மாநகராட்சி 51வார்டு பதவிகளுக்கு 180 பேர் மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் காலை முதலே வேட்பாளர் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 45 நபர்கள் அதிமுக வேட்பாளர் போட்டியிடுகின்றனர். இன்று 15 மேற்பட்ட அதிமுக வேட்பாளர்கள் வரிசையில் காத்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

4வார்டில் வி.பாலாஜி, 7வார்டில் சுசீலா வள்ளிநாயகம், 3 வார்டில்  ஜோதிலட்சுமியும், 28 வார்டில் என்பவரும், 2 நந்தகுமாரும் 11 வது வார்டில் குட்டி சண்முகமும், 37 வது வார்டில் வேலரசு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் இன்று மனுதாக்கல் செய்தனர்.

Tags:    

Similar News