சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!

பழங்குடியின மக்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டுகுளம் உள்ளிட்ட நாலு இடங்களில் இருளர் குடியிருப்புகள் கட்டப்பட்டது

Update: 2024-04-26 12:15 GMT

குண்டுகுளம் இருளர் குடியிருப்பு பகுதியில் இறந்த ஒருவரின் உடலை புதைக்க அப்பகுதியில் இடம் தர மறுத்ததால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள தாயார்குளம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரி , குளம் போன்ற பகுதிகளில் உள்ள நீர் நலைகளின் கரைமேல் பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் எல்லாம் இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க பணிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது என பல வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு  இந்நிலை ஏற்பட்டது.

இதனை முற்றிலும் நீக்கும் வகையில் காஞ்சிபுரம் அடுத்த  குண்டுகுளம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு,  மாகரல் அடுத்த மலையான்குளம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் ஆகிய நான்கு பகுதிகளில் சுமார் 443 குடியிருப்புகள் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. 

இந்த குடியிருப்பு வசதியில் சாலை வசதி குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி , கழிவறை என அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதிகளில் மெல்ல மெல்ல பழங்குடியின மக்கள் தங்கள் பழைய நீர்நிலைப் பகுதிகளில் இபகுதிக வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த குண்டுகுளம் பகுதியானது விப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ள நிலையில் அந்த குடியிருப்பில் வசித்து வந்த வசந்தா என்ற பெண்மணி  இரு தினங்களுக்கு முன்பு  மரணம் அடைந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய அந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடுகாட்டிற்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அருகில் உள்ள ஊராட்சி இடுகாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் இடுகாட்டிற்கு அவரது உடலை அமரர் வாகனத்தில் எடுத்து வந்து நல்லடக்கம் செய்துள்ளனர். 

குடியிருப்பு வழங்கப்படும் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளில் இந்த இடுகாடும் ஓன்று என்பதும், இதேபோல் அதன் அருகிலே உள்ள அரசு இதேபோல் அதன் அருகிலே உள்ள கீழ்க்கதிர்பூர் பகுதியில் கட்டப்பட்ட 2000 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி பகுதிக்கும் இதே நிலை மூன்று முறை ஏற்பட்டது தற்போது வரை அந்த பகுதிக்கும் இடுகாடு ஒதுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அப்பகுதியில் யாரேனும் இருந்தால் குறைந்தபட்சம் வாகனத்திற்கு ரூபாய் 5000 செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏழ்மையான மக்கள் வாழும் இப்பகுதியில் இந்த பொருட்செலவு என்பது பெரிய அளவாக அவர்களுக்கு  தெரிய வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் வருவாய்துறைக்கு தகுந்த அறிவுரை வழங்கி விரைவாக இதற்கு தீர்வு காண வைக்க வேண்டும் என்பதே அனைவரின கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News