காமாட்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.53.65லட்சம் காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் எண்ணப்பட்டத்தில், பக்தர்களின் காணிக்கையாக ரூ.53,65,176 பெறப்பட்டது.

Update: 2022-01-24 14:15 GMT

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளர்கள்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் இரு உண்டியல்கள்,  கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு,  திறந்து எண்ணப்பட்டது. திருக்கோயில் பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும்,  பக்தர்களின் காணிக்கையை கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் பக்தர்கள் செலுத்தியது தங்கம் 242 கிராம், வெள்ளி 320 கிராம் மற்றும் ரொக்கமாக ரூ.53,65,176ஆகியன இருந்தது. இத்தொகை முழுவதும்,  காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி சங்கரமடம் கிளையில் இட்டு வைப்பு செய்யப்பட்டது.

Tags:    

Similar News