கொள்முதல் செய்யாததால் பூஞ்சையடைந்து வீணாகும் நெல்: விவசாயிகள் கவலை

கொள்முதல் தேதி கடந்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் பூஞ்சை அடைந்து தரம் குறைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் புகார்

Update: 2022-05-07 07:00 GMT

விஷார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் பூஞ்சையடைந்துள்ளதை காட்டும் விவசாயி 

கடந்தாண்டு பெய்த பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அறுவடை காலம் கடந்த மாதம் துவங்கியதால் அறுவடை பணியை விவசாயிகள் துவக்கினர்.

விவசாயிகள் அறுவடை செய்த நல்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப மண்டல கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டது.

கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க விவசாயிகள் தங்கள் பெயரை இணையதளத்தில் சரியான ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்முதலை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த தேதி முடிந்தும் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பின்றி கிடக்கும் நெல் மூட்டைகள் நினைந்து சேதமாகியது.

இதனால் நெல் மூட்டைகள் பூஞ்சை அடைந்து தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பதிவு கடந்து 20 நாட்களாகியும் கொள்முதல் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உடனடியாக நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News