தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

Update: 2024-04-25 12:15 GMT

காஞ்சிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது. உடன் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, மாவட்ட பொதுச் செயலாளர் ருத்ர குமார்.

தமிழகத்தில் பாஜக வாக்காளர்களைக் கண்டுபிடித்து நீக்கம் செய்துள்ளதாகவும், இது அரசியல் கட்சியின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என பாஜக மாநில துணை செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்.

பாரத பிரதமர் மோடி குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக கூறிவரும் நிலையில் அதற்கான சரியான விளக்கம் அளிக்கும் நோக்கில் தமிழகத்தில் மாவட்டந்தோறும் தலைநகரங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பு பாஜக நடத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாபு முன்னிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் திருமண டால்பின் ஸ்ரீதரன் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாரத பிரதமர் மோடி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தி பேசியதாக கூறிவரும் நிலை தவறானது எனவும், காங்கிரஸ் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்ளவே இது போன்ற செய்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அதிக அளவில் விடுபட்டுள்ளது குறித்து கேட்டபோது, தேர்தல் ஆணையம் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளதாகவும் ஒரே வீட்டில் புதிய வாக்காளரை இணைத்தும் பலமுறை வாக்களித்த வாக்காளர் நீக்கியும் உள்ளனர்.

குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் என தெரியும் நபர்களை நீக்கி உள்ளது தேர்தல் ஆணையத்தின் தவறு எனவும் அதற்கு சில கட்சியின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என தெரிவித்தார்.

இவையெல்லாம் உடனடியாக தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும் எனவும் தன் கடமையை சரிவர மக்களின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ருத்ரகுமார் , ஊடகப்பிரிவு செயலாளர் மணிகண்டன் , கேபிள் சரவணன் , தாமரை ஆறுமுகம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News