கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5½ பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது
Erode News- ஈரோடு மாவட்டம் கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்த மூதாட்டியிடம் 5½ பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Erode News, Erode News Today- கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்த மூதாட்டியிடம் 5½ பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 5 கார்னர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 67). இவர் நேற்று (3ம் தேதி) மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டில் படுத்திருந்தார். அப்போது, வீட்டினுள் நுழைந்த பெண் ஒருவர் சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துக்கொண்டு ஓடினார்.
இதனால், அதிர்ச்சியடைந்து சின்னம்மாள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் ஒடிச்சென்று அந்த பெண்ணை பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில், அந்த பெண் வாய்க்கால் ரோடு மங்கம்மாள் வீதியைச் சேர்ந்த சுமதி (வயது 35) என்பதும், அவர் சின்னம்மாள் வீட்டில் 3 மாதங்களாக வாடகைக்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சுமதியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 5½ பவுன் தாலிக்கொடியை மீட்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.