ஈரோடு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant-Intermediate), செயலாளர்-இடைநிலை (Company Secretary-Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost and Management Accountant- Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் இப்பயிற்சி பெற விரும்பும் மாணக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யலாம்.
மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு, தொலைபேசி எண் 0424-2259453 அணுகி பயன்பெறலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.