ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக சண்முகசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி பவானி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், அம்மாபேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.