ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 225 மனுக்களின் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

ஈரோட்டில் இன்று (டிச.2) திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 225 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.;

Update: 2024-12-02 12:00 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோட்டில் இன்று (டிச.2) திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 225 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை, குடிநீர் வசதி, ஆக்கிரமிப்பு, ஓடை தூர் வாருதல், இலவச தையல் இயந்திரம் வேண்டுதல் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 225 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

பின்னர், பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News