திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த பயணியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Update: 2024-05-12 02:45 GMT

விபத்துக்குள்ளான மினி சுற்றுலா வேனை படத்தில் காணலாம்.

திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த பயணியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு மினி சுற்றுலா வேனில் புறப்பட்டனர். வேனை மைசூரை சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டினார். அதில், 11 பயணிகள் இருந்தனர். மாலை 5 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 9வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News