மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 286 கன அடி..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (ஜூன்.5) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 286 கன அடியாக உள்ளது.;
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (ஜூன்.5) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 286 கன அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,000 கன அடியாக சரிந்துள்ளது.
அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 89 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.5) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 45.18 அடியானது. அப்போது, நீர் இருப்பு 14.91 டிஎம்சியானது.