தமிழக அளவில் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை நோக்கி பெரம்பலூர் அருண் நேரு

தமிழக அளவில் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை நோக்கி பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னேறி வருகிறார்.

Update: 2024-06-04 12:21 GMT
அருண்நேரு.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக அளவில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை  8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களே  முன்னிலையில் உள்ளனர். ஒரு சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக முழுமையான வெற்றி பெற்றுள்ளது என்று கூற வேண்டும்.

தமிழகத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் அருண் நேரு. இவர் திமுக முதன்மைச் செயலாளரும் ,தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கேஎன் நேருவின் மகன் ஆவார். இவர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சந்திரமோகனும் பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் போட்டியிட்டனர். இதில் ஓட்டு எண்ணப்பட்ட முதல் சுற்றில் இருந்தே அருண் நேரு தொடர்ந்து சுற்றுக்கு சுமார் 10,000  வாக்குகளுக்கும் மேல் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்து வந்தார்.

20 வது சுற்று முடிவில் அருண் நேரு 5 லட்சத்து 79 ஆயிரத்து 435 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் 2 லட்சத்து 5 ஆயிரத்து 283 வாக்குகளும் பெற்றிருந்தனர். 20-வது சுற்று முடிவில்  திமுக வேட்பாளர் அருண் நேரு அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை விட 3 லட்சத்து 74 ஆயிரத்து 152 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

இன்னும் நான்கு சுற்று வாக்குகள் எண்ண வேண்டியது உள்ளது .24 வது சுற்று முடிவில் அருண் நேரு சுமார் 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவே முதலிடத்தில் இருப்பார் என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News