பவானிசாகர் அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (ஜூன்.5) இன்று காலை 8 மணி நிலவரப்படி 56.03 அடியாக உயர்ந்தது.

Update: 2024-06-05 03:45 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (ஜூன்.5) இன்று காலை 8 மணி நிலவரப்படி 56.03 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த நிலையில் , அணையின் நீர்த்தேக்க பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

நேற்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 986 கன அடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 55.81 அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன்.5) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 709 கன அடியாக குறைந்தது. அப்போது, அணையின் நீர்மட்டம் 56.03 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 6.03 டிஎம்சியாக இருந்தது.

Tags:    

Similar News