திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 57,306 வாக்குகள் முன்னிலை..!

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி 10வது சுற்றில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 57,306 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 08:15 GMT

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, பாஜக வேட்பாளர் முருகானந்தம், அதிமுக வேட்பாளர் அருணாசலம்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி 10வது சுற்றில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 57,306 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது, 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 5,56,198 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 2,28,692 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் அருணாசலம் 1,71,386 வாக்குகளும்,  பாஜக வேட்பாளர் முருகானந்தம் 88,572 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 46,102 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சுப்பராயன் 57,306 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

Tags:    

Similar News