திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
திருப்பூர் தொகுதி:-
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குப்பதிவு 70.58 சதவீதம் :-
திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கே.சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பா.ஜனதா சார்பில் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் களம் கண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்குகள் பதிவாகின. இதன் வாக்குப்பதிவு 70.58 சதவீதம் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை:-
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
திமுக கூட்டணி வெற்றி:-
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 4,72,739 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3,46,811 வாக்குகளை பெற்றார்.
3வது இடத்தில் பாஜக:-
மொத்தம் 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் முருகானந்தம் 1,85,322 வாக்குகள் பெற்று 3ம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 95,726 வாக்குகளையும் பெற்று 4ம் இடத்தை பிடித்தனர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-