Free BeautyTraining For Women ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி; டிச.,13ம் தேதி துவக்கம்

Free BeautyTraining For Women ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி,இம்மாதம் 13ம் தேதி துவங்குகிறது.;

Update: 2023-12-06 05:00 GMT

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

Free Beauty Training For Women 

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி, வரும் டிசம்பர் 13ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், வரும் டிசம்பர் 13ம் தேதி பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இந்த பயிற்சியானது டிசம்பர் 13ம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 22ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளன. பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குள்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தாரும் பயிற்சியில் சேரலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

இப்பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவா்கள் 0424 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 , 7200650604 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News