மலைவழியில் மரண பயணத்தில் பெயின்ட் லாரி கவிழ்ந்து பரபரப்பு
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இருந்து மதுரைக்கு பெயின்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் பரபரப்பு ஏற்பட்டது;
மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி – அதிஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர், கிளீனர் :
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் பயணித்த லாரி ஒன்று கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இருந்து மதுரைக்கு பெயின்ட் ஏற்றிச் சென்ற லாரியை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர்-ரணி பகுதியை சேர்ந்த சையது ஷேக் முகைதீன் (50) ஓட்டிச் சென்றார்.
வரட்டுப்பள்ளம் அணையின் 'வியூ பாயிண்ட்' அருகே வந்தபோது, லாரியின் கட்டுப்பாடு திடீரென விடுபட்டு இடதுபக்கம் கவிழ்ந்தது.
இதில் டிரைவரும், கிளீனராக இருந்த காளிதாசன் (34) என்பவரும் சிராய்ப்பு காயங்களுடன் உயிர்தப்பினர்.
பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.