Fusion X – 2025 : நாமக்கலில் தேசிய தொழில்நுட்ப விழா

நாமக்கலில், பி.ஜி.பி. பொறியியல் கல்லூரியில், ஒருநாள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது;

Update: 2025-05-12 05:50 GMT

Fusion X – 2025 : நாமக்கலில் தேசிய தொழில்நுட்ப விழா

நாமக்கலில் உள்ள பி.ஜி.பி. பொறியியல் கல்லூரியில், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறை இணைந்து நடத்திய தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு, 'ப்யூஷன் எக்ஸ் – 2025' என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை ஊக்குவிக்கவும், சமகால தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பகிரவும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.

துறைத் தலைவர் ராஜசேகர் வரவேற்கையில், கல்வி குழுமத் தலைவர் பழனி ஜி. பெரியசாமி கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்களை ஊக்குவித்தார். பெங்களூருவைச் சேர்ந்த ICF International நிறுவனத்தின் எரிசக்தி சந்தை ஆய்வாளர் மதன் நாகராஜன், செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி சந்தைகளில் நிகழும் புதிய போக்குகளை எடுத்துரைத்தார். கல்வி குழும நிர்வாகி கணபதி தலைமை வகித்தார்.

தொடர்ந்து, கல்வி குழும டீன் பெரியசாமி மற்றும் கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர், மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கருத்தரங்குகள் தரும் பயன்பாடுகள் குறித்து பேசினர். நன்றி உரையை, தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் ரம்யா வழங்கினார்.

இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தங்களது கண்டுபிடிப்புகள், திட்டங்கள், மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News