மழையோடு வந்த மின்னலும், இடியும் – அந்தியூர் பகுதியில் இயற்கையின் ஆட்டம் ஆரம்பம்

ஒரு மணி நேரம் இடைவிடாத மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து.;

Update: 2025-05-12 06:30 GMT

தாமரைக்கரையில் ஆலங்கட்டி மழை – ஒரு மணி நேரம் இடைவிடாத கனமழை

அந்தியூர் அருகே பர்கூர் பகுதிக்குட்பட்ட தாமரைக்கரை, ஈரட்டி, கடை ஈரட்டி, தேவர்மலை, பெஜ்லட்டி, மடம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இடிக்கச் சுடிக்க ஆலங்கட்டி மழை பெய்ததால், தாமரைக்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் சாலைகள் நீர்  சூழ்ந்தன.

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் சிறிதளவு தடுமாற்றம் ஏற்பட்டது.

Tags:    

Similar News