சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சித்தோடு பேரூராட்சி சமுதாயக்கூடம் முன்பு தொடங்கி பேரணி, நால்ரோட்டில் நிறைவடைந்தது.
மாணவிகளின் பங்களிப்பு
இதில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனங்கள், கார், கனகர வாகனங்களில் செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.
இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அவசியம்
மேலும், இருசக்கரம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, உடன் பயணிப்பவர்களும் தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
காரில் சீட்பெல்ட் பயன்பாடு
காரில் பயணிப்போர் அனைவரும் சீட்பெல்ட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சந்திப்புகளில் வேகக் கட்டுப்பாடு
பிரதான சாலையில் சந்திப்புகளில் வேகத்தை குறைத்து கவனமுடன் கடந்து செல்ல வேண்டும் என்றும் பேரணியில் அறிவுறுத்தப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்டோர்
பேரணியில், சித்தோடு போலீசார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முபராக் அலி, குருசாமி, செல்வி திவ்யா, ராதிகா, காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.