நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.;
நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாரம் நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோய் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவின் அவசியம், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரங்கசாமி, மருத்துவ அலுவலர்கள் மரு.கலைச்செல்வி, மரு.ஆனந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஆர்த்தி,சுகாதார ஆய்வாளர் சென்னியப்பன், பகுதி சுகாதார செவிலியர்கள்,செவிலியர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.