டிராக்டர் மோதி சரக்கு ஆட்டோ, கார் சேதம்..!
டிராக்டர் மோதி சரக்கு ஆட்டோ, கார் சேதம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
கோபி அருகே உள்ள ஒத்தகுதிரையில் தனியார் மில் அருகே புதுக்கரைபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் நேற்று புதிய பேக்கரி கடையினை திறந்துள்ளார். இந்தக் கடைக்கு சரக்கு சப்ளை செய்ய வந்த சரக்கு ஆட்டோ, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் கடை உரிமையாளர் மாரிச்சாமியின் காரும் அருகிலுள்ள மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதிவேக டிராக்டர் விபத்து
இந்நிலையில், ஒத்தக்குதிரையிலிருந்து கோபி நோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடையின் முன்பு நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் காரின் மீது மோதியது. இந்தப் பயங்கர விபத்தில், சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து சேதமடைந்தன.
கோபி போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் ஆப்பகூடல் அருண்குமாரை அவர்கள் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.