மாநில அரசுகளுக்கு துணைவேந்தா் நியமன அதிகாரம் – மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்
மாநில அரசுகளுக்கு துணைவேந்தா் நியமன அதிகாரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்,தமிழகம் எப்படி பாதிக்கப்படுமென்று பெ.சண்முகம் விளக்கம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக உயர்கல்வி துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோவதை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார். துணைவேந்தர் நியமனம் முதல் இட ஒதுக்கீடு வரை அனைத்திலும் மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த அறிக்கையில் ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஜிஎஸ்டி வரி விதிப்பால் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாலையோர கொடிக்கம்பங்கள், வேங்கைவயல் விவகாரம் போன்ற பிரச்சனைகளிலும் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசின் அணுகுமுறை சரியல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.