ஈரோடு மாநகராட்சி நகர்புற சுகாதார நிலைய மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர் பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு டி.பார்ம் அல்லது பி.பார்ம் படித்தவர்கள் மற்றும் தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். ஏக்காரணம் கொண்டும் பணிவரன் முறை, அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும் செப்டம்பர் 24ம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.